Wednesday, August 14, 2013

மூதாதயரைத் தேடி ஒரு பயணம் 1 : கொங்கர் புளியங்குளம்


கொங்கர் புளியங்குளம்

மதுரைக்கு 4 மாதங்களுக்கு பின் சென்ற பயணம் இது, இம்முறை செல்ல வேண்டிய இடங்கள், அந்த இடத்தின் சிறப்பு, அதன் சம்பந்தபட்ட புத்தகங்கள், அதன் தொடர்புடைய நபர்கள், கொண்டு செல்லும் கருவிகள், உடன் வரும் நண்பர்கள், உள்ளூர் வழிகாட்டி என பட்டியலிட்டே கிளம்பினேன்.

கடந்த திங்கள் கிழமை (18-03-2012) வழக்கம் போல் நான் மட்டுமே தனியாக செல்ல வேண்டியாதகிற்று. நாகமலை தொடர்ச்சியின்  தென்புறம் அதிகம் சென்று இருக்கிறென், இம்முறை நாகமலையின் தொடர்ச்சியில் வடக்குபக்கம் தேனி சாலை வழியாக விக்கிரமங்கலம்வரை சென்று பின் மலையின் தென்புறமாக காடுபட்டி வழியாக சோழவந்தான் வழி மதுரை வர திட்டம். வெயிலின் கொடுமை விக்கிரமங்கலம் சென்று அதே வழியில் திரும்பி நாகமலை கருப்பனசாமி கணவாய் வழியாக திரும்பி மேலக்கால் வந்து நாகதீர்த்தம் சென்று மதுரை வந்தேன்.

பொதுவாக முன்னர் நாகமலையின் வடக்குப்புறம் தேனி சாலை ஏனோ அதிகம் என்னை ஈர்த்ததில்லை மரங்கள் அற்ற அதிக வெயிலாக இருக்கும்  பகுதி இவை, கண்ணகி மதுரையை எரித்து கோபத்துடன் சென்ற பாதை இந்த சாலை, ஏனோ இன்னும் பற்றி எரிகிறது வெயிலில். (இப்பகுதியில் தான் சமணமலைகள் அதிகம் இருக்கும் பகுதி)
-----
மதுரையில் இருந்து சுமார் 15 கிமீ தொலைவில் மதுரை தேனி ரோட்டில் காமராசர் பல்கலைகழகத்தை அடுத்து வலப்புறம் அமைந்துள்ளது இவ்வூர். நாகமலையின் தொடரின் தென் பகுதியில் அமைந்துள்ள இந்த குன்றில் இயற்கையான குகைத்தளம் அமைந்துள்ளது, இங்கு சுமார் 50கற்படுக்கைகள் வெட்டப்பட்டுள்ளன, குகையில் விளிம்பில் தமிழ்பிராமி கல்வெட்டுகள் வெட்டப்பட்டுள்ளன. முகப்பு மலையில் மகாவிரர் சிலையும் உள்ளன.

நாகமலையில் வடப்புறம் இருக்கும் கொங்கர் புளியங்குளத்தின் வரைபடம்

 கொங்கர் புளியங்குளம் சமணமலை
 தமிழ்நாடு தொல்லியல் துறையின் வழிகாட்டி பலகை
 மலைக்கு செல்லும் வழியில் உள்ள மாயன் கோவில்

 மாயன் கோவிலில் தூண்கள் வடிக்க வரையப்பட்ட மார்க்.
 மாயன் கோவில் முகப்பு தோற்றம்

மஞ்சள் நிறத்தில் இருக்கும் சாலை மதுரை - தேனி சாலை, பச்சை மாயன் கோவிலுக்கு செல்லும் சாலை, சிகப்பு மலைக்கு செல்லும் பாதை
வாகனத்தில் சென்றால் மாயன் கோவில் வரை செல்லலாம்.


No comments:

Post a Comment