Tuesday, December 28, 2010

வேடந்தாங்கல்

வேடந்தாங்கல்.... பல முறை நான் போக திட்டமிடப்பட்டு இறுதியில் கடந்த சனிக்கிழமை (25 - 12 - 2010) விடியற்காலை  4.30 மணியளவில் சென்னையில் இருந்து விழியன் அண்ணன் குடும்பமாகவும், மோகன் (மாம்ஸ்) -விஜி (அக்கா), பிரபா மேடம்,  மற்றும் பிரசன்னா ஜீ ஆகியோருடனும் சென்றேன்,

பிரசன்னா ஜீ வேளச்சேரிக்கு வந்து என்னை அழைத்து போனார், சில ”ந”ண்பர்கள் வருவதாக இருந்தது கடைசி நேரத்தில் வர முடியாத காரணத்தினால் நானும் பிரசன்னா ஜீ மட்டும் கிளம்பினோம், பெருங்குளத்தூரில் காரை நிறுத்தி டீ சாப்பிட்டு கொண்டு இருக்கும் போது மோகன் (மாம்ஸ்) -விஜி (அக்கா) வந்தார்கள் அவர்க்ளுக்கு டீ ஆர்டர் செய்யும் போது தான் கவனிதோம் அவர்கள் வண்டி பஞ்சர் என்று அதை சரி செய்து முடிக்கும் போது விழியன் அண்ணன் குடுமப சகிதமாக வந்து சோர்ந்தார், 3 வண்டியில் 14 பேர் வேடந்தாங்கல் நோக்கி கிளம்பினோம்,

கிளம்பினது கொஞ்சம் லேட் தான் இருந்தாலும்,  கூகுள் மேப் உதவியுடன், வண்டியின் வேகத்தால 6.30 மணிக்கெல்லாம் வேடந்தாங்கல் போய் சேர்ந்துட்டோம் .

சென்னையில் இருந்து செங்கல்பட்டு வழியாக சுமார் 75 கிலோ மீட்டர் தூரத்துல காஞ்சிபுரம் மாவட்டம்  வேடந்தாங்கலில் இருக்கிறது பறவைகள் சரணாலயம்.

செங்கல்பட்டு தாண்டி போகும் வழி எங்கும் சிறு சிறு ஏரிகள், குட்டைகள்,  அருமையான காற்று, சில்லென்ற சூழல்,  வேடிக்கை பார்த்துட்டே சரணாலயம் போய் இறங்கினோம்,

இறங்கினதும் நேர டீ கடைக்கு போய் டீ சாப்பிட்டு, நுழை வாயில் போனோம் டிக்கேட் வாங்க,  டிக்கேட் வாங்கினது போக மீதி சில்லறை இல்லை என்றார், கார்க்கு பார்க்கிங் டிக்கேட் போக மீதி சில்லறை கேட்ட இல்லைன்றார், கேட்ட காலையில் நீங்க தான் சார் முதல் போணின்றார். முதல் நாள் முடிவில் கணக்கு முடித்தது போக சிறு தொகையை கையிறுப்பாக வைத்து கொள்ள மாட்டார்கள்  போல, வெறும் பையுடன் வந்தார், இருந்தாலும் நாங்க விடாமல் எல்லோரிடமும் இருக்கும் சில்லறையை எடுத்து தந்து உதவினோம்.

உள்ளே போனால் ஒரு பெரிய ஏரி, மறுகரையில் மரங்களின் நடுவே பஞ்சு போதிகளாக பறவைகள், பறவைங்க அதுகளோட குட்டிகளுக்கு உணவூற்றதும், அதுக்காக உயிருள்ள மீன்கள அதுகளோட அலகால (வாயால) கவ்வி பிடிச்சிக்கிட்டு போறதும், வீடு கட்ட குச்சியை எடுத்துட்டு போறதும் பார்க்க அவ்வளவு அழகாக இருந்துச்சு.

டெலஸ்கோப் கோபுரம் இருக்கு அவ்ளோ பெரிய இடத்துக்கு ஒரே ஒரு டெலஸ்கோப் கோபுரம் தான் இருக்கிறது , அதில் நமக்கு பக்க சுவரில் நின்று வேடிக்கை பார்க்க சண்டை போட வேண்டி இருக்கு, படம் எடுக்க முடியலை, அந்த பறவையை பாருங்க, இங்க பாருங்கனு பக்கத்தில் இருக்கும் மக்கள் உணர்ச்சிவச பட்டு கையை நீட்டிராங்க, காமிராவை பத்திராமா பாதுகாப்பதே பெரிய வேலையாகிருச்சு, (அப்படியே நீ எடுத்துட்டாலும்னு சொல்லுவிங்க)

இருபுறமும மரங்கள் சூழ்ந்த நடை பாதை, பார்வையாளர்கள் அமர்ந்து செல்ல நல்ல இருக்கைகளையும், நிழல் பிரதேசங்களையும் உருவாக்கியிருப்பது  வியப்பாக இருந்தது,

அடிக்கடி விழியன் அண்ணன் குளோசபில் பறவையை படம் எடுத்து என்னை வெறுப்பேற்றிட்டே இருந்தார், மோகன் மாம்ஸ் டெலஸ்கோப் கோபுரம் பக்கம் தான் பார்க்க முடிந்தது அதுக்கு அப்புறம் எங்களுக்கு முன்னாடி ஒடிட்டார், பிரசன்னா ஜீ அவர் வைத்துருந்த மோனோபேட் (Monopods) என்கிட்ட தந்து படம் எடுத்து பழகிகோனு சொல்லி தந்துட்டார், விஜி அக்கா எனக்கு காமிரா வேணும்னு கேட்டுட்டே இருந்தாங்களா என் காமிராவை ஒசி வாங்கி அவங்களும் படம் எடுத்தாங்க,

ஒரு வழியாக படப்பிடிப்பு முடிச்சுட்டு சாப்பிட போகலாம்னு வெளியில வந்தோம், அங்கு குறைந்த பட்சம் ஒரு சின்ன நல்ல ஹோட்டல் கூட அங்கே இல்ல,  ஒரு குடிசைல ஒரு அக்கா கையாள இட்லி வடை பஜ்ஜி சாப்பிட்டு  வந்தோம் (பில்லுக்கு பணம் நான் தரவில்லை), சில பேருக்கு இந்த ஹோட்டல் பிடிக்கலை, அரசாங்கம் உதவில ஒரு நல்ல உணவகம் அமைத்து தந்தால் நல்ல இருக்கும்.

இயற்கையின் அற்புத படைப்புகளை நேரில் பார்த்து வியந்திருந்த எங்களை, அங்கிருந்து கிளம்ப மனம் இல்லாமல் வரும் தலைமுறையினருக்கு இந்த அற்புதங்களை காண நாம் எண்ண செய்ய போகிறோம் என்று ஆயிரம் கேள்விகளுடன்  அங்கிருந்து கிளம்பினோம்

வழிநடத்திய, அழைத்து சென்ற, சொல்லி தந்த விழியன் அண்ணா, பிரசன்னா ஜீ, மோகன் மாம்ஸ், அவர்களுக்கு நன்றி.


வேடந்தாங்கல் போக முடிந்தால்

  • அதிகாலையிலே, மாலையிலோ போங்க.
  • பேருந்து வசதி கம்மி, முடிந்த மட்டும் வண்டி ஏற்பாடு பண்ணி போங்க.
  • சுத்தம் பார்க்கும் நபர்கள், சாப்பாட்டை விட்டில் செய்து கொண்டு வருவது நலம்.
  • சாப்பிட்ட பின் குப்பைகளை குப்பை தொட்டியில் போடுங்க.
  • சத்தம் போட்டு பேசாதீங்க.
  • சின்ன பசங்க அசட்டை தனமாக ஏதும் செய்யாமால் பார்த்து கோங்க.
  • புகையிலை பிடிக்காதிங்க.
  • தொலைநோக்கி கொண்டு போங்க, இல்லாதவங்களுக்கு அங்கே கடைகளில் வாடகைக்கு கிடைக்கும்.
  • பிளாஸ்டிக் பைகளை கொண்டு போகதிங்க.
  • முடிந்தால் போகும் போது என்னிடம் சொல்லுங்க நானும் வருகிறேன்.

கட்டண விபரங்கள்:
சிறியவர்: 2 ரூபாய்
பெரியவர்: 5 ரூபாய்
ஒளிப்படக் கேமரா: 25 ரூபாய்
காட்சிக் கேமரா: 150 ரூபாய்
டூ விலர் பார்க்கிங் : 5 ரூபாய்
கார் பார்க்கிங் : 15 ரூபாய்


(வார்த்தை பிரஜோகம், எழுத்து பிழை இருப்பின் மன்னிக்க)


நுழை வாயில்





வழிகாட்டி





















 













முகப்பு