Thursday, August 15, 2013

மூதாதயரைத் தேடி ஒரு பயணம் 1 : விக்கிரமங்கலம்


விக்கிரமங்கலம்

கொங்கர் புளியங்குளத்தை தொடர்ந்து அன்றே விக்கிரமங்கலம் என்னும் ஊருக்கு செல்ல திட்டமிட்டு இருந்ததால் வரைபடம், உள்ளூர் மக்களின் உதவியுடன் மதுரை தேனி ரோட்டிற்க்கு மீண்டும் வந்து தேனி செல்லும் சாலையில் பயணத்தை தொடர்ந்தேன், செக்கணுராணி என்னும் இடத்தில் வரும் நாற்சந்தியில் வலப்புறம் மேலக்கால் செல்லும் பாதையில் திரும்பி நாகமலையின் கணவாய், கருப்பணசாமி கோவிலை தாண்டி வலப்புறம் இருக்கும் கடையில் நிறுத்தினேன். வெயிலின் உக்கிரம் அதிகமாக இருந்ததால் கொஞ்சம் ஒய்வேடுத்து பின் கிளம்பினேன். மீண்டும் நாகமலையின் தென்புறம் மலையை ஒட்டிய பாதையிலேயே பயணித்தேன், இடையில் ஊர் பெரியவர் ஒருவரை லோக்கல் கைட்டாக அழைத்து சென்றேன்.

மதுரையில் இருந்து 26 கிமீ தூரத்தில் உள்ளது விக்கிரமங்கலம் அந்த ஊருக்கு முன் உண்டாங்கல் மலை உள்ளது, கிமு இரண்டாம் நூற்றாண்டை சேர்ந்த சமண குகை தமிழ்பிராமி எழுத்துக்கள் உள்ளன.

கீழே படத்தில் மஞ்சள் கலரில் கோடிட்டிற்க்கும் இடம் செக்காணுரணியில் இருந்து விக்ரமங்கலம் உண்டாங்கல்மலை



மலையில் சமணக்குகை இருக்கும் பகுதியும், அதன் பின்புறம் குகையில் முருகன் கோவிலும்.



நாகமலையில் கணவாய் அருகே உள்ள வவ்வால் புடவு
(மிகப்பெரிய வவ்வால் இருப்பதாக சொல்கிறார்கள்)

 நாகமலையின் தொடர்ச்சி

போகும் வழியில் உள்ள முருகன் கோவில்
இந்த ஊரின் அருகே மிகப்பெரிய அளவில் ஜல்லிக்கட்டு நடந்தாகவும்,  1940-50 களில் ஒரு ஊரே காலி செய்து தேனி பக்கம்  சென்றதாக கூறுகிறார்கள்.

No comments:

Post a Comment