Tuesday, September 18, 2012

புறா 1



எங்களது அலுவலக மொட்டை மாடிக்கு வந்த விருந்தினர்கள். 
(Pigeon)

கம்பீரம்

வாட் எ லூக்

 தாக சாந்தி
 பார்த்து மெதுவா
 எண்டா தள்ளிவிட்ட
  ராஜாக்கு மரியாதை
  தி கிங்

Thursday, September 6, 2012

மூதாதயரைத் தேடி ஒரு பயணம் 3 : கிடாரிபட்டி மற்றும் அரிட்டாபட்டி


இந்தமுறை என் பயணத்தில் உடன் வந்தவர் ஆனந்த், ஒரு கல்லூரியில் உதவி பேராசிரியராக உள்ளார். இவருக்கும்  தமிழ் மற்றும் வரலாற்றின் மீதும் இருக்கும் ஆர்வத்தால் இம்முறை இவர் என்னுடன் வர சம்மதித்தார்.

6 மணிக்கு கிளம்ப இருந்த நாங்கள் கொஞ்சம் தாமதமாக கிளம்ப வேண்டியதாகிற்று, 7.30 மணிக்கெல்லாம் சர்வேயர் காலனி வந்தடைந்தோம் காலை உணவே அங்கேயே முடித்துவிட்டு அழகர் கோவில் நோக்கி செல்ல தோடங்கினோம்,

இந்த முறையும் முக்கிய சாலை வழி செல்லமால் கிராமத்தின் வழியாக செல்ல திட்டமிட்டு கூகுள் மேப் உதவி கொண்டு போகும் பாதையை முன்பே பிரிண்ட் எடுத்து வைத்திருந்தேன், இருந்தும் சில இடங்களில் எங்களால் பாதையை கண்டுபிடிக்க முடியவில்லை, ஊர் மக்களின் வழிகாட்டலுடன் அழகர் கோவில் - மேலூர் ரோட்டினை அடைந்தோம். இங்கு இடப்புற திரும்பினால் அழகர்கோவில் செல்லும் பாதை, வலப்புறம் சென்றால் மேலூர், நாங்கள் வலப்புறம் திரும்பி கொஞ்ச தூரத்திலேயே அந்த பாழடைந்த கிணற்றை கண்டோம் ரோட்டின் வலப்புறத்தில் இருந்தது. (புகைப்படம் முதல் மடலில் இருக்கும்) கிணற்றின் சுவற்றில் உள்ள கல்வெட்டுகளில் 1905 என்று போட்டுள்ளது, கல்லினால் கிணற்றின் உட்புறம் மண் சரியாமல் இருக்க வைக்கப்பட்டுள்ளது., கொஞ்சம் பழையமாதிரி கிணறு போல் உள்ளது, ரோட்டின் ஒரத்தில் இருந்து கிண்றில் தண்ணீர் எடுக்க  வசதியாக உள்ளது. தற்போது எல்லாம் கவனிபாரற்று கிடக்கிறது.

கிடாரிபட்டி மலையை விசாரித்து மலையின் அடிவாரம் வந்த பின் அங்கிருந்தவர்களிடன் விசாரித்த போது அருகில் மாந்தோப்பில் வண்டியை நிறுத்திவிட்டு காட்டுப்பாதை வழியாக மேலேறினால் மேலே ஒரு மண்டபம் இருக்கும் அங்கே சென்று பாருங்கள் என்றார், நாங்களும் அவ்வாறே வண்டியை நிறுத்திவிட்டு மலை ஏற சென்றோம், மலையின் மேல் ஏற அருகில் பாதை எங்கும் தட்டுப்படவில்லை, புதர்களில் ஒற்றையடி பாதை தெரிந்தது அதில் கஷ்டபட்டு மலையின் அடிவாரத்தை அடைந்தேன். பூச்சிகளும், மூட்களும், சூழ இருந்த புதர்களை தாண்டி செல்ல கடினமாக இருந்தது பாதி வழி கடந்த பின் உடன் வந்த ஆனந்த் நான் வேறு வழி முயற்சிக்கிறேன் என்று வந்த வழியே திரும்ப சென்று மலையின் பின்புறம் ஏறி மேலே ஏறி வந்தார், நான் மலை உச்சியை ஊர்ந்தே மேலே ஏறினேன்.


மலையின் நடுவே இருந்த சிறு குகைக்கு சென்றுவிட்டேன், மலையின் மடிப்பில் கொஞ்சம் இடமிருந்தது நின்று படம் எடுக்க, மலையில் இயற்கையாய் அமைந்திருந்தது இந்த குகை, இதன் ஆழம் 12 அடி இருக்கும், 5-6 பேர் உள்ளே இருக்கலாம், இந்த இடத்திற்க்கு வருவது கொஞ்சம் சிரமம் தான், யாரும் வந்து போன அடையாளம் இல்லை, பொதுவாக இந்த மாதிரி இடங்கள் இளைஞர்களின் பார்வைக்கு பட்டிருந்தால்  கண்டிப்பாக பாட்டில், மூடி, சிகிரெட் துண்டு, ஏதேனும் எரித்த சுவடு, பாறையின் சுவற்றில் பெயர் ஏதேனும் இருக்கும், அப்படி ஏதுவும் தென்படவில்லை. 
(இதே போல் மலையின் நடுவே இன்னொரு இடத்தில் பச்சை துண்டுகள் கொடி போல் கட்டி இருந்தனர்,)


 Inline image 3
திரும்ப மலையின் உச்சிக்கு செல்ல ஆரம்பித்தேன், கையில் காமிரா, காலில் செருப்பு, மிகவும் சிரம்பட்டு மலை ஏறி கொண்டிருந்த போது மலையில் சிறு சிறு வெடிப்புகள் கண்டேன், சில இடங்களில் பாறைகளை வெட்டிய சுவடும் இருந்தது (கிரானைட் சோதனை போல இருந்தது :) ) மலையில் 80 சதவிகிதம்  மலை ஏறிய பின் இளைப்பாற கொஞ்சம் இடம் கிடைத்தது, அங்கிருந்து அழகர் கோவில் மலையை பார்த்த போது  மிக ரம்மியமாக காட்சியளித்தது 
Inline image 6

மலையின் உச்சியை நான் அடையும் போது சரியாக ஆனந்தும் வந்து சேர்ந்தார், மலை மேலே ஒரளவிற்க்கு சமதளமாக இருந்தது அங்கிருந்து காணும் போது ஒரு வட்டம் போட்டது போல் சுற்றி மலைகள், தூரத்தே அரிட்டாபட்டி மலை தெரிந்தது, மலையின் ஒரு ஒரத்தில் இருந்து மற்றொரு ஒரத்திற்க்கு நடந்தோம் அங்கு இடையில் கருங்கற்களால் ஆன கட்டிடம் கட்டி வைத்திருந்தனர், உள்ளே கிராம தெய்வங்களுக்கு பூஜை போட்டு வைத்திருந்தனர், (மலையின் கீழே உள்ள மக்களிடம் கேட்டதற்க்கு ”கருப்பு” என்றனர்) அங்கிருந்து மலையின் கடைசி ஒரம் வரை பார்த்தோம் எங்குமே குகை இருப்பதாக தெரியவில்லை, திரும்ப மலையின் மறுபுறம் சென்று பார்த்தோம், வெயில் கொஞ்சம் அதிகமானது, படங்களும் சரியாக எடுக்க முடியவில்லை கொண்டு வந்த தண்ணீரும் தீர்ந்துவிட, மலையை விட்டு இறங்கினோம், வண்டி இருக்கும் இடத்திற்க்கு சென்று அங்கிருந்து மெயின் ரோட்டிற்க்கு செல்ல எப்படியும் அரைமணி நேரத்திற்க்கு மேல் ஆகும்  அதனால் அருகில் இருந்த குடிசையில் தண்ணீர் கேட்டோம், ஒரு செம்பை தந்து அருகில் இருக்கும் குளத்தில் உள்ள ஊற்றில் மொந்து குடிக்க சொன்னார்கள், யோசனையுடனே சென்று குடித்தோம், அருமையாக இருந்தது, எப்படி இவ்வளவு நாட்கள் இந்த தண்ணீரை விட்டு வைத்தனர் என்ற தெரியவில்லை, சில விஷயங்களை பொதுவில் வராமல் இருப்பதே நல்லது தான், குளத்திலேயே இளநீர் கிடைக்கும் போது அமெரிக்கா காரணுக்கு மூக்கு வேர்த்திரும், கொஞ்ச நாளில் இவையும் பாட்டிலில் அடைத்திருப்பார்கள்.

வழி சொன்ன பெரியவரை தேடினோம் திரும்ப கண்ணில் படவே இல்லை :))

அங்கிருந்து வண்டி நிறுத்தியிருந்த மாந்தோப்பை நோக்கி சென்றோம், மீண்டும் ஆவல் தூண்டவே ஆனந்த்தை மாந்தோப்பில் இருக்க வைத்துவிட்டது, ஆனந்த் சென்ற பாதை வழியாக சென்று மலையின் பின்புறம் சென்று பார்த்தேன், குகை இருப்பதாக தெரியவில்லை,  இறங்கும் போது தான் கவனித்தேன், நான் இப்போது வந்த பாதை மலை ஏறும் இடத்தில் சிறுத்து மலையின் உச்சையை அடையும் போது அகண்டும் மலை நீள வாக்கில் அமைந்திருப்பதும், இந்த மலை முதலை போல் அமைந்திருப்பதாகபட்டது, கூகுள் மேப்பிலும் கிட்டதட்ட அப்படி தான் இருந்தது.

மாந்தோப்பை அடைந்து நாம் இதற்க்கு மேலும் தாமதிக்க வேண்டாம் அரிட்டாபட்டி செல்லலாம் என்று கிளம்பினோம், திரும்ப அழகர்கோவில்-மேலூர் சாலையை அடைந்து மேலூர் செல்லும்  பாதையில் அரிட்டாபட்டி விலக்கில் வலப்புறம் திரும்பினோம், கொஞ்ச தூரம் வந்ததும் சின்னையன் கோவில் ஒன்று இருந்தது, வேண்டுதலுக்காக வைக்கப்பட்டிருந்த சிறிதும் பெரிதுமாக மண்குதிரைகள் நிறைய இருந்தன, சில காவல் தெயவங்களும் இருந்தன, கோவில் முன் படம் எடுக்க அனுமதிக்கவில்லை.
(சின்னையன் கோவில் குதிரைகள்)
Inline image 1

அரிட்டாபட்டியை நோக்கி திரும்பவும்  பயணித்தோம், ஒரே பாதை தான், ஊரின் மத்தியில் இருந்த பேருந்து நிறுத்துமிடம், தொலைக்காட்சி பார்க்க நீண்ட புதிதாக கட்டப்பட்ட திண்னை, 100 வயதை அடைந்த வீடுகள், சிமிண்ட் சாலை, சாக்கடை கால்வாய், இவைகளை கடந்ததும் மலைக்கு செல்ல பாதை விசாரித்தோம் சிறுவர்கள் வழிகாட்டினர், வழி அறிந்து வயலை கடந்து ஏரியின் இடப்பக்கம் திரும்பி கொஞ்ச தூரம் சென்றதும் ஆலமர நிழலில் சில வண்டிகள் நிறுத்த பட்டிருந்தன அங்கே வண்டியை நிறுத்திவிட்டு அருகில் உள்ள குளத்தருகே வந்தோம். அங்குள்ள குளத்தின் கரையிலும் ஏதோ சிற்பங்கள் இருந்தன. எங்களை அடுத்து வந்த ஒரு வேனில் இருந்து ஒரு குடும்பமாய் சிலர் வந்தனர், மலையை நோக்கி விழுந்து வணங்கி கொண்டிருந்ததைப் பார்த்ததும் நெகிழ்ச்சியாயிருந்தது. 

மலையை நோக்கி நடந்தோம்.

ஏரி வறண்டு போய் பொட்டல் நிலங்களாக இருந்தது அதை கடந்ததும், மலை அடிவாரத்தில் கொஞ்சம் ஏறி இறங்கியதும் வலப்புறம் செல்லும் பாதையில் சென்றால் ஒரு மேட்டின் மேல் குடைவரை கோவில் இருந்தது, முதலில் தொல்லியல்துறை சார்ந்த கல்வெட்டு இருந்தது அதன் அருகே இருந்த படிக்கட்டு வழியாக மேலேறினோம், மலையை குடைந்து உருவாக்கப்பட்ட கருவறை, மலையை குடைந்து அதே பாறையிலேயே உருவாக்கபட்ட சிவலிங்கம், துவாரபாலகர்கள். முன்மண்டப இடப்பக்கத்தில் இருந்த இலகுலீசர் (சிவன்) சிலை. மிகவும் அரிதான சிற்பம். இக்கோயிலுக்கு எதிரில் உள்ள மலையிலிருந்து கொண்டு வரும் சுனைநீரிலிருந்துதான் சிவனைக் குளிப்பாட்டுகிறார்கள். எனவே இந்தச் சுனை நீரை இக்கோயில் தீர்த்தச்சுனைநீர் என்கின்றனர். குடைவரைக்கு அருகே ஒரு சிறு குகை உள்ளது. ஒருவர் மட்டும் உள்ளே படுக்கலாம். உள்ளே படுத்துப் பார்த்தால் மிகவும் குளுமையாக இருந்தது. அதன் அருகே பெண்தெய்வம் சிறு மண்டபத்திலுள்ளது. இந்த ஊர் மக்கள் இவ்விடத்தை இடைச்சிமண்டபம் என்கின்றனர். 

குகையில் உள்ள லிங்கத்துக்கு பூஜைக்கான ஏற்பாடு செய்து கொண்டிருந்தார்கள், பூஜைக்கு ஏற்பாடு செய்திருந்தவரிடம் நாங்கள் உள்ளே சென்று பார்க்கலாமா என்றதும், சட்டையை கழற்றி விட்டு 21 முறை லிங்கத்தை சுற்றி வாருங்கள் என்றார் பூஜைக்கு ஏற்பாடு செய்திருந்தவர். இறையருள் பெற நாங்களும் சுற்றி வந்தோம், உள்ளே மிக குளிர்ச்சியாக இருந்தன, உட் புற சுவர்கள், தரைகள் கொஞ்சம் கரடுமுரடாக இருந்தன. 

அங்கிருந்து கிளம்பும் போது ஒரு பாறையின் கீழ் இளைப்பாறினோம், பக்கத்தில் இருந்த ஊர்காரரிடம் விசாரித்த போது மலையையே தெய்வமாக பார்ப்பதாக சொன்னார், இங்குள்ள மக்கள் இம்மலையை நம்பித்தான் இருக்கின்றனர். இந்த மலையிலிருந்து வரும் நீர் தான் ஆனைகொண்டான் கண்மாயை நிறைக்கிறது. பின் வெளியாகும் உபரி நீர் வெளிச்சென்று, அழகர்மலையிலிருந்து வரும் சிலம்பாற்று நீருடன் சேர்ந்து வைகையில் கலக்குமாம். 

மலையில் இயற்கையாகவே அணை போல் அமைந்துள்ளது. இரண்டு மலைகள் இணையும் இடத்தில் உள்ள பள்ளத்தில் நீர் நிரம்பி இங்குள்ள மக்களுக்கு விவசாயத்திற்கு தேவையான நீரை வழங்குகிறது. பொதுவாக அணைகளை உருவாக்க அரசு எவ்வளோ மக்களை வெளியேற்றி, காடுகளை அழித்து அணைகளை கட்டி வருகிறது. அப்படியிருக்கும் போது இயற்கையாக அமைந்த இது போன்ற அணையை பாதுக்காக்காமல் இந்த மலையை வெட்டி கிரானைட்டாக மாற்றி கொண்டிருக்கிறார்கள் பண முதலைகள், அரசும், அரசு அதிகாரிகளும். 

கைதூக்கி கும்பிட்ட மலைகள் கிரானைட்டாக மாறி நம்மை ஏவுகிறவனுக்கு காலுக்கு கீழே இருக்கிறது, ஆண்டாண்டு காலமாய் வாழ்ந்த நம் அடையாளங்களை காலில் போட்டு நசுக்குகின்ற உரிமையைய் யார் தந்தது இவர்களுக்கு, பணத்திற்க்காக தாயின் தாய்பாலை கூட விற்க்கும் கூட்டம் இது, இந்த மலையின்  ஒரு கல்லைக்கூட எந்தக் கொம்பனாலும் வாழ்நாள் முழுதும் வருந்தி உழைத்தாலும் உருவாக்கிவிட முடியாது. 

பார்க்க பார்க்க பிரமாண்டத்தையும், அள்ள முடியாத பொக்கிஷங்களையும், தன்னுள் ஒளித்துவைத்து கொண்டு நிம்மதியாக தூங்க முடியாமல் இரவு பகல் தூங்கமால் தூங்கநகரம் என பெயர் மட்டும் வாங்கி கொண்ட மதுரையை சுற்றி கல்லாகச் சமைந்து விட்ட யானையையும், நாகத்தையும் உசுப்பேற்றி வருகிறோம். அவை உயிர் பெற்று வெறி கொண்டு வரும் நாளில் யாரும் எதிர்நிற்க முடியாது. 

அடுத்த பயணத்தில் தொடர்வேன்...

படங்களை காண
https://picasaweb.google.com/109292260549096695317/KidaripattiArittapatti?authkey=Gv1sRgCK2R54uF6d21ZQ

மூதாதயரைத் தேடி ஒரு பயணம் 2 : கிடாரிபட்டி மற்றும் அரிட்டாபட்டி


மலை ஏறி சுற்றின பின்பு தான் தெரிந்தது தவறான மலைக்கு வந்துள்ளோம் என்று, வெயில் ஏற தாகம் அதிகம் ஆனது, கீழே இறங்கினோம்,  அடுத்து அரிட்டாபட்டிக்கு செல்லலாம் என்று திரும்ப அழகர்கோவில் - மேலூர் ரோட்டிற்க்கு வந்து அரிட்டாபட்டி செல்லும் பாதையில் திரும்பினோம், கொஞ்ச தூரம் சென்றதும் சின்னையன் கோவில் இருந்தது. கோவிலை படம் எடுக்க கூடாது என்று சொல்லிவிட்டனர். அதனால் வெளியில் இருந்த சிலைகள் மட்டும் எடுத்தோம்.

நேர்த்திகடனாக தந்த குதிரைகளின் ஒரு பகுதி
வரிசையாக நிறுத்திவைக்கப்பட்ட மண் குதிரைகள்.

குதிரையை தாங்கும் குதிரை.
அரிட்டாபட்டி மலை

மலையில் தொல்லியல்துறை சார்ந்த கல்வெட்டு

முன்மண்டப இடப்பக்கத்தில் இருந்த இலகுலீசர் (சிவன்) சிலை


முன்மண்டப இடப்பக்கத்தில் இருந்த பிள்ளையார் சிலை

மலையை குடைந்து அதே பாறையிலேயே உருவாக்கபட்ட சிவலிங்கம்



Wednesday, September 5, 2012

மூதாதயரைத் தேடி ஒரு பயணம் 1 : கிடாரிபட்டி மற்றும் அரிட்டாபட்டி


கடந்த வாரம் கிடாரிபட்டி & அரிட்டாபட்டி சென்று வந்தேன், இதில் கிடாரிபட்டி மலைக்கு பதில் அதன் அருகில் இருக்கும் வேறு மலைக்கு தப்பான வழிகாட்டிதலால் சென்று விட்டோம். இருந்தும் நல்ல அனுபவத்தை தந்தது. 
 
கூடிய விரைவில் கிடாரிபட்டிக்கே சென்று அதன் படங்களும் இந்த இழையிலேயே தொடர்வேன்.


அழகர்கோவில் - மேலூர் ரோட்டில்  வலதுபுறம் இருந்த பாழடைந்த கிணறு


 நாங்கள் சென்ற மலையின் ஒரு பகுதி
 அழகர்கோவில் மலை
 நாங்கள் சென்ற மலையின் பெயர்

 மலையில் இயற்கையாய் அமைந்திருந்த குகை, இதன் ஆழம் 12 அடி இருக்கும், 5-6 பேர் உள்ளே இருக்கலாம்.
 மேலே உள்ள குகை கீழே உள்ள் மலையின் உயரத்திலும், நீளத்திற்க்கும் நடுவே அமைந்திருந்தது. (விடியோ பின்னர் இணைக்கிறேன்.)

மலையின் தொடர்ச்சியில் இடப்புறம் தெரியும் தெரியும் மலை அரிட்டாபட்டி மலை, வலப்புறம் மாங்குளம் கழுகுமலை.


அரிட்டாபட்டி மலை
 யானைமலை
நாங்கள் இருந்த மலையில் இருந்த ஒரு தூணின் பின்னால்  தெரிவது அரிட்டாபட்டி. (இடப்புறம்)