Thursday, February 21, 2013

மூதாதயரைத் தேடி ஒரு பயணம் 1 : கரடிப்பட்டி

இந்த முறை மதுரைக்கு கிளம்பும் போது கொங்கர் புளியங்குளம் தான் என் திட்டத்தில் இருந்தது, நண்பர்கள் சிலரிடம் விசாரித்த போது பகலில் செல்வது நல்லது அதிகாலை கொஞ்சம் ரிஸ்க், என சொல்லி இருந்தனர்.

அதிகாலை எழுந்து கிளம்பும் போது ஸ்கூட்டியில் அவ்வளவு தூரம் செல்ல முடியுமா, வண்டியின் நிலைமை வேறு சரியில்லை ஒரே யோசனையுடன் நாகமலை புதுக்கோட்டை வரை வந்துவிட்டேன், தேநீர் அருந்தலாம் என கடையில் நிறுத்தி கடைக்காரரிடம் பாதை, நிலவரம் விசாரித்தேன், அருகிலேயே ஒரு மலை இருக்கு அங்கு சென்றீர்களா என்றார், கீழக்குயில்குடியா என்ற போது இல்லை இன்னும் கொஞ்ச தூரம் சென்றதும் இடப்புறம் திரும்பும் சாலையில் கண்மாய் ஒட்டி பயணிக்க வேண்டும் என்றார், சரி இதற்கே முயற்சிக்கலாம் என சென்று விட்டேன்.

------------------
மதுரையில் இருந்து தேனி செல்லும் சாலையில் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்துக்கு எதிரில் உள்ள கரடிப்பட்டி / முத்துப்பட்டி மலை, மதுரைக்காமராசர் பல்கலைக்கழகக் குடியிருப்புகளுக்கு எதிரே இருந்த சிறுபாதையில் இரயில் தண்டவாள தடம் தாண்டி சென்றதும் எதிரே சிறு சிறு குடியிருப்புகள், அங்கு விசாரித்து ஒத்தையடி பாதையை கண்டுபிடித்து ஒரு காலத்தில் மலையாக இருந்த இடத்தை பள்ளமாக்கி குட்டை போல் செய்திருந்ததை அதை சுற்றி வந்ததும் அங்கும் சில குடியிருப்புகள் ஆனால் முற்றிலும் வேறாக வெறும் குடிசைகளாக இருந்தன, வெளிப்புற மண் சுவர்களில் சாணம் பூசி கூரைகள் சுவரின் உயரத்தை விட ஒன்றரை மடங்கு உயரத்தில் பிரமிடு போல் காட்சி அளித்தன, அந்த இடம் முழுதுமே சாணம் தெளித்து மஞ்சளும் பச்சையும் கலந்த வெளுப்பில் இருந்தன, ஒரு பக்கம் கால்வாயும், மறு பக்கம் மரங்கள் சூழ்ந்த்தும் அந்த இடமே நகர வாசனை காணாதது போல், கால இயந்திரத்தில் சில நூறு வருடம் பின்னோக்கி சென்றது போல இருந்தது. படம் எடுக்க வேண்டும் என்று எண்ணத்தை விட இதை ரசிக்கும் எண்ணமே மேலோங்கி இருந்தது,

கிராமத்தை கடந்து மலை பாதையை அடையும் போது  ஒற்றையடி பாதையாக மாறியது, வாத்து கூட்டம் வழிவிட மாடுகள் வழிகாட்ட நாய்கள் படை சூழ பறவைகள் வரவேற்க்க மலையின் அடிவாரத்தை அடைந்தேன்.

கரடிப்பட்டி மலை
 சில வருடம் முன் அந்நாந்து பார்த்த மலைகள் இப்ப குனிந்து பார்க்க வேண்டிய நிலைமை
ஒற்றையடி பாதை
 மலையை சுரண்டியவன் ஒரு சிறந்த ரசிகன் போல,

 மலை ஏறும் பாதை
 பாறையின் அடிவாரத்தில் தான் இருக்கிறது சமண படுக்கை


No comments:

Post a Comment