Showing posts with label பேச்சிபள்ளம். Show all posts
Showing posts with label பேச்சிபள்ளம். Show all posts

Thursday, November 8, 2012

மூதாதயரைத் தேடி ஒரு பயணம் 1 : கீழக்குயில்குடி


இந்த முறை பயணத்தின் போது கீழக்குயில்குடி சென்றிருந்தேன், என் வீட்டில் இருந்து 4 மைல் தொலைவில் இருந்தும் இந்த மலைக்கு சென்று பார்த்ததில்லை, இப்போது தான் சந்தர்ப்பம் கிடைத்தது இம்முறை என் உடன் வந்து உதவியவர் திரு.பாலாஜி.
---
மதுரையிலிருந்து நாகமலை புதுக்கோட்டை செல்லும் வழியில் கீழக்குயில்குடி உள்ளது. மெயின் ரோட்டிலிருந்து ஒன்றரை கிலோ மீட்டர் தொலைவில் சமண மலை, அடிவாரத்தில் அய்யனார் கோவில் நம்மை வரவேற்கிறது.

அய்யானாரை பார்த்துட்டு மலைஏறுவோம்.

மலையும், அய்யனார் கோவிலும், தாமரைகுளமும்

அய்யனார் கோவில்

  இந்த மலையில் தெரியும் பாதை வழியாக தான் மலை ஏற வேண்டும்.
மலையெறும் பாதை
 பேச்சிபள்ளம்
 சிற்பங்களுக்கு அருகில் சுனை உள்ளது. வருடம் முழுவதும் தண்ணீர் சுரந்தபடியே இருக்கிறது.