அப்பாவின் சொந்த ஊர், சொந்தங்கள், நண்பர்கள், சொந்த நிலம், சிறு வயதில் பால்குடம் எடுத்தது, பள்ளி நாட்களில் கட் அடித்து மலைகளில் சுற்றியது, படித்த இன்ஸ்ட்டியூட், திருப்பரங்குன்றத்திற்க்கும் எனக்கும் எப்போதும் ஒரு பிணைப்பு உண்டு
திருப்பரங்குன்றம் எத்தனையோமுறை சென்றிருக்கிறேன், மலைகளை சுற்றி வந்திருக்கிறேன், இந்த குடைவரை கோவில், சமண படுக்கைகளுக்கு சென்று பார்த்ததில்லை, இம்முறை சந்தர்ப்பம் கிடைத்தது. தனியாக சென்றேன், பாறை சரிவில் சரிந்து பாறை இடுக்கில் மாட்டி கொண்டு 20 நிமிடம் வெளியேற முடியாமல் தவித்து தண்ணிர் செல்லும் பாதை வழியாக வெளியேறி வந்தேன் இம்முறை Adventure ட்ரிப் தான்.
மலையின் பின்புறம் மலை ஏறும் பாதை
குடைவரை கோவில் செல்லும் பாதை
குடைவரை கோவிலுக்கு செல்லும் படிகட்டு
 |
Add caption |
குடைவரை கோவிலின் முகப்பு
அதி காலையிலேயே சென்றதால் பூட்டி வைத்து இருந்தனர்
 |
Add caption |
குடைவரை கோவில் பூட்டி யிருந்ததால் திறக்கும் வரை மலை ஒரங்களில் சுற்றி வர
கிளம்பினேன், குடைவரைக்கு மேலே நெட்டு பாறைகளில் தொப்பி போல் இருந்தால் ஒரு
ஆர்வத்தில் மேலேறினேன்.
மேலே சிறு சுனை உள்ளது இந்த அமைப்புல் குடைந்து குகை மாதிரி ஆக்கும் சாத்தியங்கள் இருந்தும் ஏனோ இதில் ஏதும் செய்யவில்லை.