Thursday, February 21, 2013

மூதாதயரைத் தேடி ஒரு பயணம் 4 : திருப்பரங்குன்றம்


குடைவரை கோவிலில் படம் எடுத்து முடித்ததும் அங்கிருந்த பாதுகாவலர் நிலையூர் திருப்பத்தில் படுக்கைகள் உள்ளன என்றார். அங்கேயேயும் போய்விட கிளம்பினேன். அவர் சொல்லியபடி அந்த இடம் அடைந்ததும் காம்பவுண்ட் போல் அமைந்திருந்த வீட்டை தண்டி முட் செடிகளை தாண்டி பாதை தெரியாமல் மலையேறி நான் பாறை இடுக்கில் சரிந்து மாட்டி கொண்டேன். காலையில் இருந்து ஆகாரம், தண்ணீர் அருந்தாமல், சோர்வுடன்  இருந்தாலும் மலை ஏறிவிட வேண்டும் என்ற முனைப்புடன் ஏறிவிட்டேன்.

நிலையூர் திருப்பத்தில் இருந்த பலகை.
மலை சுற்றி வரும் பாதையில் நிலையூர் திருப்பம் இடப்புறம் வரும், அதை தாண்டி வலப்புறமாகவே பார்த்து வந்தால் இந்த பலகை தெரியும், காம்பவுண்ட், மூட்செடிகளினுடே தான் பயணிக்க வேண்டும்.

 மலை ஏறுவதற்க்காக இருந்த பாதை

குகை 1
பெரிய பாதையை தவிர்த்து வலப்புறம் உள்ள இரு சிறு ஒட்டை ஜன்னல் போன்ற அமைப்பில் இருந்தது.

குகையின் உள்ளிருந்த சுனை, கீழே படுக்கை போன்று தரையில் செதுக்கி இருக்கின்றனர், ஆனால் அங்கிருந்த அமைப்பு நீள வசத்தில் பாதிக்கு மேல் இல்லை.
 குகையில் இருந்து எடுக்கபட்ட திருப்பரங்குன்றம் இரயில் நிலையம்.
 தூரத்தே தெரியும் நாகமலை மலையில் ஆரம்பத்தில் தெரியும் சிறு மலை கீழக்குயில்குடி. (படம் சரியாக வரவில்லை அடுத்த முறை இதை சரியாக எடுத்து அனுப்புகிறென்.)

No comments:

Post a Comment