குடைவரை கோவிலின் உள்ளே இருந்த சிற்பம்.
பாறையை குடைந்து ஒரு மண்டபம் அளவுக்கு உட்புறமாக செதுக்கி அதனுள் புடைப்பு சிற்பங்கள் உருவாக்கியுள்ளனர்,
கிழக்கு நோக்கிய ஒரு கருவறையும், அதனை அடுத்த முன் மண்டபமும் கொண்ட இக்கோயில் தெற்குப்பார்த்து அமைந்துள்ளது
சிலைகள் சிதைக்கப்பட்டுள்ள நிலையில். நடராஜர், சிவகாமி அம்மையார்.
முருகன், வள்ளி தேவ சேனா
குடைவரை கோவிலின் உள்ளே கிழக்கு நோக்கிய கருவறையில் நந்தியின் முன் புறம் நிற்கும் அர்த்தநாரி சிற்பம் உள்ளது.
சிற்பத்தின் தலைப்பகுதியில் அசோக மரத்தின் கிளைகள் காட்டப்பட்டுள்ளன. சைவக்கோயில்களில் இவ்வாறு காணப்படுவதில்லை. எனவே தொடக்கத்தில் அசோக மரத்தின் கீழ் அமர்ந்த ஓர் சமணத் துறவி அல்லது மகாவீரர் சிற்பம் இங்கு இருந்திருக்கலாம். பின்னர் இது சைவக் கோயிலாக மாற்றம் பெற்ற போது இதனை அர்த்தநாரியாக மாற்றியிருக்கலாம் என தோன்றுகிறது.
அர்த்த நாரி சிலையின் மேல் அசோக மர கிளையும் சிலையின் பின்புறம் நந்தி.சிற்பத்தின் தலைப்பகுதியில் அசோக மரத்தின் கிளைகள் காட்டப்பட்டுள்ளன. சைவக்கோயில்களில் இவ்வாறு காணப்படுவதில்லை. எனவே தொடக்கத்தில் அசோக மரத்தின் கீழ் அமர்ந்த ஓர் சமணத் துறவி அல்லது மகாவீரர் சிற்பம் இங்கு இருந்திருக்கலாம். பின்னர் இது சைவக் கோயிலாக மாற்றம் பெற்ற போது இதனை அர்த்தநாரியாக மாற்றியிருக்கலாம் என தோன்றுகிறது.
மண்டபத்தில் இருந்த கல்வெட்டு
ASI சார்பாக வைத்திருந்த போர்டு
அழகு..
ReplyDeletesuper
ReplyDelete