Showing posts with label nagamalai. Show all posts
Showing posts with label nagamalai. Show all posts

Wednesday, August 14, 2013

மூதாதயரைத் தேடி ஒரு பயணம் 6 : கொங்கர் புளியங்குளம்


குகைக்கு அருகில் உள்ள மகாவீரர் சிலை


 சிலைக்கு அருகில் இருந்த குகைப்போன்ற பாறை படிவம்

 கொங்கார் புளியங்குளம் மலையின் தொடர்ச்சி
 மலையில் இருந்து ஒரு வீயூ
 மகாவீராரும் நாமமும்

படங்களை பிக்காசாவில் பார்க்க : https://picasaweb.google.com/109292260549096695317/KongarPuliyankulam

மூதாதயரைத் தேடி ஒரு பயணம் 5 : கொங்கர் புளியங்குளம்

தமிழ்பிராமி எழுத்துக்கள்


 தற்க்கால தமிழ் எழுத்துக்கள் பெயிண்டில்





 சமண குகை படியெறும் வழியில் இருந்து.
செட் போட்டிருக்கும் இடத்தில்  தான் தமிழ்பிராமி எழுத்துக்கள் உள்ளன.

மூதாதயரைத் தேடி ஒரு பயணம் 4 : கொங்கர் புளியங்குளம்

மலை மேல் இருக்கும் குகை மற்றும் கற்படுக்கைகள். குகையின் உயரம் ஆரம்பத்தில் 6 அடியில் இருந்து போக போக குறைகிறது, 50-60 படுக்கை இருக்கலாம்.





  குகையின் முகப்பு தோற்றம்
 இரண்டாம் குகை போன்று இருந்தாலும் படுக்கை ஏதுவும் இல்லை.

மூதாதயரைத் தேடி ஒரு பயணம் 3 : கொங்கர் புளியங்குளம்


மலையெறும் வழியில் தகவல் பலகை
 மலை பாதை

 மலைகுகைக்கு செல்லும் பாதை


மூதாதயரைத் தேடி ஒரு பயணம் 2 : கொங்கர் புளியங்குளம்


மாயன் கோவில்
 கொங்கர் புளியங்குளம் சமணமலை

 மலையின் எதிர்புறம் உள்ள பாறை
  மலைக்கு செல்லும் வழியில் புதிதாக கட்ட இருக்கும் கோவில்

மூதாதயரைத் தேடி ஒரு பயணம் 1 : கொங்கர் புளியங்குளம்


கொங்கர் புளியங்குளம்

மதுரைக்கு 4 மாதங்களுக்கு பின் சென்ற பயணம் இது, இம்முறை செல்ல வேண்டிய இடங்கள், அந்த இடத்தின் சிறப்பு, அதன் சம்பந்தபட்ட புத்தகங்கள், அதன் தொடர்புடைய நபர்கள், கொண்டு செல்லும் கருவிகள், உடன் வரும் நண்பர்கள், உள்ளூர் வழிகாட்டி என பட்டியலிட்டே கிளம்பினேன்.

கடந்த திங்கள் கிழமை (18-03-2012) வழக்கம் போல் நான் மட்டுமே தனியாக செல்ல வேண்டியாதகிற்று. நாகமலை தொடர்ச்சியின்  தென்புறம் அதிகம் சென்று இருக்கிறென், இம்முறை நாகமலையின் தொடர்ச்சியில் வடக்குபக்கம் தேனி சாலை வழியாக விக்கிரமங்கலம்வரை சென்று பின் மலையின் தென்புறமாக காடுபட்டி வழியாக சோழவந்தான் வழி மதுரை வர திட்டம். வெயிலின் கொடுமை விக்கிரமங்கலம் சென்று அதே வழியில் திரும்பி நாகமலை கருப்பனசாமி கணவாய் வழியாக திரும்பி மேலக்கால் வந்து நாகதீர்த்தம் சென்று மதுரை வந்தேன்.

பொதுவாக முன்னர் நாகமலையின் வடக்குப்புறம் தேனி சாலை ஏனோ அதிகம் என்னை ஈர்த்ததில்லை மரங்கள் அற்ற அதிக வெயிலாக இருக்கும்  பகுதி இவை, கண்ணகி மதுரையை எரித்து கோபத்துடன் சென்ற பாதை இந்த சாலை, ஏனோ இன்னும் பற்றி எரிகிறது வெயிலில். (இப்பகுதியில் தான் சமணமலைகள் அதிகம் இருக்கும் பகுதி)
-----
மதுரையில் இருந்து சுமார் 15 கிமீ தொலைவில் மதுரை தேனி ரோட்டில் காமராசர் பல்கலைகழகத்தை அடுத்து வலப்புறம் அமைந்துள்ளது இவ்வூர். நாகமலையின் தொடரின் தென் பகுதியில் அமைந்துள்ள இந்த குன்றில் இயற்கையான குகைத்தளம் அமைந்துள்ளது, இங்கு சுமார் 50கற்படுக்கைகள் வெட்டப்பட்டுள்ளன, குகையில் விளிம்பில் தமிழ்பிராமி கல்வெட்டுகள் வெட்டப்பட்டுள்ளன. முகப்பு மலையில் மகாவிரர் சிலையும் உள்ளன.

நாகமலையில் வடப்புறம் இருக்கும் கொங்கர் புளியங்குளத்தின் வரைபடம்

 கொங்கர் புளியங்குளம் சமணமலை
 தமிழ்நாடு தொல்லியல் துறையின் வழிகாட்டி பலகை
 மலைக்கு செல்லும் வழியில் உள்ள மாயன் கோவில்

 மாயன் கோவிலில் தூண்கள் வடிக்க வரையப்பட்ட மார்க்.
 மாயன் கோவில் முகப்பு தோற்றம்

மஞ்சள் நிறத்தில் இருக்கும் சாலை மதுரை - தேனி சாலை, பச்சை மாயன் கோவிலுக்கு செல்லும் சாலை, சிகப்பு மலைக்கு செல்லும் பாதை
வாகனத்தில் சென்றால் மாயன் கோவில் வரை செல்லலாம்.


Thursday, February 21, 2013

மூதாதயரைத் தேடி ஒரு பயணம் 1 : கரடிப்பட்டி

இந்த முறை மதுரைக்கு கிளம்பும் போது கொங்கர் புளியங்குளம் தான் என் திட்டத்தில் இருந்தது, நண்பர்கள் சிலரிடம் விசாரித்த போது பகலில் செல்வது நல்லது அதிகாலை கொஞ்சம் ரிஸ்க், என சொல்லி இருந்தனர்.

அதிகாலை எழுந்து கிளம்பும் போது ஸ்கூட்டியில் அவ்வளவு தூரம் செல்ல முடியுமா, வண்டியின் நிலைமை வேறு சரியில்லை ஒரே யோசனையுடன் நாகமலை புதுக்கோட்டை வரை வந்துவிட்டேன், தேநீர் அருந்தலாம் என கடையில் நிறுத்தி கடைக்காரரிடம் பாதை, நிலவரம் விசாரித்தேன், அருகிலேயே ஒரு மலை இருக்கு அங்கு சென்றீர்களா என்றார், கீழக்குயில்குடியா என்ற போது இல்லை இன்னும் கொஞ்ச தூரம் சென்றதும் இடப்புறம் திரும்பும் சாலையில் கண்மாய் ஒட்டி பயணிக்க வேண்டும் என்றார், சரி இதற்கே முயற்சிக்கலாம் என சென்று விட்டேன்.

------------------
மதுரையில் இருந்து தேனி செல்லும் சாலையில் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்துக்கு எதிரில் உள்ள கரடிப்பட்டி / முத்துப்பட்டி மலை, மதுரைக்காமராசர் பல்கலைக்கழகக் குடியிருப்புகளுக்கு எதிரே இருந்த சிறுபாதையில் இரயில் தண்டவாள தடம் தாண்டி சென்றதும் எதிரே சிறு சிறு குடியிருப்புகள், அங்கு விசாரித்து ஒத்தையடி பாதையை கண்டுபிடித்து ஒரு காலத்தில் மலையாக இருந்த இடத்தை பள்ளமாக்கி குட்டை போல் செய்திருந்ததை அதை சுற்றி வந்ததும் அங்கும் சில குடியிருப்புகள் ஆனால் முற்றிலும் வேறாக வெறும் குடிசைகளாக இருந்தன, வெளிப்புற மண் சுவர்களில் சாணம் பூசி கூரைகள் சுவரின் உயரத்தை விட ஒன்றரை மடங்கு உயரத்தில் பிரமிடு போல் காட்சி அளித்தன, அந்த இடம் முழுதுமே சாணம் தெளித்து மஞ்சளும் பச்சையும் கலந்த வெளுப்பில் இருந்தன, ஒரு பக்கம் கால்வாயும், மறு பக்கம் மரங்கள் சூழ்ந்த்தும் அந்த இடமே நகர வாசனை காணாதது போல், கால இயந்திரத்தில் சில நூறு வருடம் பின்னோக்கி சென்றது போல இருந்தது. படம் எடுக்க வேண்டும் என்று எண்ணத்தை விட இதை ரசிக்கும் எண்ணமே மேலோங்கி இருந்தது,

கிராமத்தை கடந்து மலை பாதையை அடையும் போது  ஒற்றையடி பாதையாக மாறியது, வாத்து கூட்டம் வழிவிட மாடுகள் வழிகாட்ட நாய்கள் படை சூழ பறவைகள் வரவேற்க்க மலையின் அடிவாரத்தை அடைந்தேன்.

கரடிப்பட்டி மலை
 சில வருடம் முன் அந்நாந்து பார்த்த மலைகள் இப்ப குனிந்து பார்க்க வேண்டிய நிலைமை
ஒற்றையடி பாதை
 மலையை சுரண்டியவன் ஒரு சிறந்த ரசிகன் போல,

 மலை ஏறும் பாதை
 பாறையின் அடிவாரத்தில் தான் இருக்கிறது சமண படுக்கை