Showing posts with label Cheyyur. Show all posts
Showing posts with label Cheyyur. Show all posts

Wednesday, August 14, 2013

மூதாதயரைத் தேடி ஒரு பயணம் 4 : ஓணம்பாக்கம்


மலைக்கு மேல் 
பாறையின் கீழ் தான் மலையின் பின்புறம் செல்ல முடியும்
பாறையின் அடியிலேயே 30 அடிக்கு மேல் ஊர்ந்தே செல்ல வேண்டும்

 3.5 அடி உயரமே உள்ள பாறையின் கீழ் பகுதியில் சவப்பெட்டி போன்று தோண்டி இருந்தனர்.
 பாறை அடுப்பு
 படுக்கை போன்று
 ஒரு பாறையில் வடித்திருந்த கல்வெட்டு

படங்களை பிக்காசவில் பார்க்க :
https://picasaweb.google.com/109292260549096695317/Onampakkam

மூதாதயரைத் தேடி ஒரு பயணம் 3 : ஓணம்பாக்கம்


மலை ஏற படிக்கட்டு அமைக்கப்பட்டிருந்தது, படியின் முடிவில் பெரிய சமதள பகுதி இருந்தது அங்கு ஒரு பெரிய பாறையில் ஒரு புறம் கோபுரம் போன்ற அமைப்பு காணப்படுகிறது,

அந்த பாறையில் பார்சுவநாதர் சிற்பம் இருந்தது. பார்சுவநாதர் தலைக்கு பின்புறம் ஐந்து தலை நாகம் விரிந்த நிலையில் வடிக்கப்பட்டுள்ளது. இருபுறமும் யக்ஷன், யக்ஷி சாமரம் வீசியபடி சிற்பம் அமைக்கப்பட்டுள்ளது.
மலை ஏறும் பாதையில் இடப்புறம் பாறையில் ஆதிநாதர் புடைப்பு சிற்பமும் காணப்படுகின்றன.
படத்தின் நேர் கீழே (ஈரமாக இருக்கும் பகுதி) மார்க் போன்று இருந்தது.
 ஆதிநாதர்
 அதே பாறையில் மகாவீரர் புடைப்பு சிற்பமும் காணப்படுகின்றன.
 மகாவீரர்

மூதாதயரைத் தேடி ஒரு பயணம் 2 : ஓணம்பாக்கம்


இந்த மலையில் இருந்த பெரிய பாறையில் கீழ் சிறு குகை போன்று இருந்தது. படுக்கைகள் ஏதும் தென்படவில்லை.


 15 அடி நீளத்துக்கு நீண்டிருந்த அந்த குகை, உயரம் 3-4 அடியே இருக்கும்

குசமலைக்கு சென்று ஏதும் படுக்கைகள் தென்படததால் அடுத்து அருகில் உள்ள குறத்திமலைக்கு சென்றோம். (விக்கி மற்றும் இதர தரவுகளில் குறத்திமலையில் படுக்கைகள் இருப்பதாக காமித்துள்ளனர்)

குறத்திமலை செல்லும் வழியில். மேகங்களே கதிர் வீச்சாக


குறத்திமலையை சுற்றி அரணாக மலைகள்

குறத்திமலை

மூதாதயரைத் தேடி ஒரு பயணம் 1 : ஓணம்பாக்கம்


மதுரையை சுற்றியுள்ள இடங்களையே தேடி கொண்டிருந்த எனக்கு ரீச் பவுண்டேஷன் முலமாக செய்யூர் ஓணம்பாக்கம் மலை செல்லும் சந்தர்ப்பம் கிடைத்தது.
எதற்க்காக சென்றேன் எனபதை ”கல்லிலே கலைவண்ணம் கண்டேன்” என்ற இழையில் சொல்லி இருப்பேன்.
-----
ஓணம்பாக்கம் மதுராந்தகம் வட்டம், செய்யூரில் இருந்து, 6 கி மீ தொலைவில் மேல்மருவத்தூர் செல்லும் சாலையில் அமைந்திருக்கிறது. இங்குள்ள குறத்திமலையிலும் கூசமலையிலும் சமண படுக்கைகள் உள்ளன. இவ்விடம்  சுற்றிலும் மலைகள் சூழ்ந்து காணப்படுகின்றன

கூசமலை