மதுரை மாவட்டம் மேலூர் வட்டத்தில் மதுரையிலிருந்து 20 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது திருவாதவூர். சங்கப் புலவர் கபிலர், திருவாசகம் பாடிய மாணிக்கவாசகர் ஆகியோர் பிறந்த ஊர். இவ்வூரின் ஒரு பகுதியில் அமைந்துள்ள ஒவாமலை என்ற மலையில் இரண்டு தமிழ் பிராமிக் கல்வெட்டுகளும் 10 பேர் தங்கும் அளவிலான குகையும் உள்ளன, இவை கி.மு இரண்டாம் நூற்றாண்டை சேர்ந்தவை.
பொதுவாக நான் செல்லும் மலைகளில் ஏறவும், மற்றும் புகைப்பட துறையில் ஆர்வம் இருக்கும் நபர்கள் வந்தால் தான் மனமென்றி பயணிக்க முடியும், இம்முறை பயணத்தின் போது கலை, பண்பாட்டில் ஆர்வமும், நல்ல பண்பும் உள்ள மதுரை அமெரிக்கன் கல்லூரி கணிததுறையில் விரிவுரையாளராக பணியாற்றும் மலரவன் அவர்களுடன் பயணத்தேன், நான் பாதி மலை ஏறும் போது இவர் மலை மேல் ஏறி கை கொடுக்கிறார், நல்ல காட்சிகள் அமைந்தால் எனக்கு முன் அவர் காமிராவுடன் நிற்கிறார். இனி என் பயணம் அவருடனே இருக்கும் என்று நம்புகிறேன்.
ஒவாமலைக்கு செல்லும் வழி
மலையின் கற்குவியல்
மலையில் வைத்திருந்த மாநில அரசின் தொல்லியல்துறை கற்பலகை
No comments:
Post a Comment