Monday, December 31, 2012
மூதாதயரைத் தேடி ஒரு பயணம் 1 : கிடாரிபட்டி
போனமுறை தவறான மலைக்கு சென்று வந்தபின்னர், இந்த முறை தவற விடக்கூடாது என நன்றாக விசாரித்து கூகுள் மேப் உதவியிடன் கீழக்குயில்குடி போய்வந்த மறுநாள் அதிகாலையில் நண்பர் அரச குமாரடன் பயணித்தேன்.
கிடாரிபட்டி அழகர்கோவில் மலையின் தொடர்ச்சியில் இருக்கிறது. மலையில் இயற்கையாக அமைந்த சுனையுடன் அமைந்த குகை உள்ளது, பிராமி எழுத்துக்களும் புடைப்பு சிற்பமும் இருந்தன.
எத்தனையோமுறை அழகர்கோவில் சென்றிருந்தாலும் கிடாரிபட்டி ஊர் வழியாக மேலூர் சென்றிருந்தாலும் இந்த மலையை பார்த்து இருக்கிறென், இது தான் கிடாரிபட்டி சமணமலை என்று அறியாமல்.
போகும் வழி பார்த்த பின்னர் மலை ஏறுவோம்
வைகையாற்றின் கரை
அழகர் கோவில் சாலை, முன்பு இந்த பாதையில் வெயிலே தெரியாத வண்ணம் மரங்களால் சூழப்பட்டு இருக்கும், இப்போது இந்த சாலை பொழிவு இழந்து காணப்படுகிறது.
அழகர்கோவில் - மேலூர் சாலையில் லதா மாதவன் பாலிடெக்னிக் முன்பாக வரும் சிறு பாலத்திற்க்கு இடப்புறம் ஒற்றையடி காட்டுப்பாதையில் 2.5 கிமீ நடந்தால் சமணக்குகையை அடையலாம்,
மலையில் இருந்து தண்ணீர் ஒடை போல் தடமே நடைபாதையாக இருந்தது பெரும்பாலும். உடன் வந்த நண்பர் அரசு 2.5 கிமீட்டரும் வண்டியை உருட்டிகொண்டே தான் வந்தார்.
பொது பாதையில் இடப்புறம் திரும்பியதுமே கிடைத்த காட்சி.
இரு வேறு திசைகளில் பிரிந்து, பாதை அறிந்து அடிவாரம் அடைந்தோம்.
வழி கேட்க ஆள் இல்லாததால் முழித்து கொண்டிருந்த இடம்.
கற்பாறைகளினால் ஆன மலை தான் சமணர்களின் குகை இருக்குமிடம்
மேக கூட்டங்கள் மிக அருமையாக இருந்தன,
மலையின் அடிவாரத்தில் இருந்து சில கிளிக்ஸ்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment