Monday, December 31, 2012

மூதாதயரைத் தேடி ஒரு பயணம் 3 : கிடாரிபட்டி


ASI மூலம் அமைக்கபட்டுள்ள படிகள்
 பாதி வரை படி இருந்தது அதற்க்கு மேல் பாறைகள் தான், வழிகாட்டி பலகைகளும் இல்லாததால் தவறுதலாக செல்ல வேண்டிய குகைகளையும் தாண்டி மலைகுகையின் மேல் உச்சிக்கு சென்று விட்டோம், அங்கிருந்த குகைகள்.

  வந்த பாதை
 குகை
  குகை
 குகைில் உள் அலி

 தீர்த்தங்கரர்
 பிராமி கல்வெட்டுக்கள்
  பிராமி கல்வெட்டுக்கள்

 
 குகையின் பனோரமா வீயூ
 குகையின் ப்ளான்
 

மூதாதயரைத் தேடி ஒரு பயணம் 2 : கிடாரிபட்டி

நாம் போக வேண்டிய குகை
Kidaripatti
Kidaripatti
Kidaripatti

Kidaripatti

Kidaripatti

kidari patti





மூதாதயரைத் தேடி ஒரு பயணம் 1 : கிடாரிபட்டி


போனமுறை தவறான மலைக்கு சென்று வந்தபின்னர், இந்த முறை தவற விடக்கூடாது என நன்றாக விசாரித்து கூகுள் மேப் உதவியிடன் கீழக்குயில்குடி போய்வந்த மறுநாள் அதிகாலையில் நண்பர் அரச குமாரடன் பயணித்தேன்.

கிடாரிபட்டி அழகர்கோவில் மலையின் தொடர்ச்சியில் இருக்கிறது. மலையில் இயற்கையாக அமைந்த சுனையுடன் அமைந்த குகை உள்ளது, பிராமி எழுத்துக்களும் புடைப்பு சிற்பமும் இருந்தன.

எத்தனையோமுறை அழகர்கோவில் சென்றிருந்தாலும் கிடாரிபட்டி ஊர் வழியாக மேலூர் சென்றிருந்தாலும் இந்த மலையை பார்த்து இருக்கிறென், இது தான் கிடாரிபட்டி சமணமலை என்று அறியாமல்.

போகும் வழி பார்த்த பின்னர் மலை ஏறுவோம்

வைகையாற்றின் கரை

அழகர் கோவில் சாலை, முன்பு இந்த பாதையில் வெயிலே தெரியாத வண்ணம்  மரங்களால் சூழப்பட்டு இருக்கும், இப்போது இந்த சாலை பொழிவு இழந்து காணப்படுகிறது.
அழகர்கோவில் - மேலூர் சாலையில் லதா மாதவன் பாலிடெக்னிக் முன்பாக வரும் சிறு பாலத்திற்க்கு இடப்புறம் ஒற்றையடி காட்டுப்பாதையில் 2.5 கிமீ நடந்தால் சமணக்குகையை அடையலாம்,
மலையில் இருந்து தண்ணீர் ஒடை போல் தடமே நடைபாதையாக இருந்தது பெரும்பாலும். உடன் வந்த நண்பர் அரசு 2.5 கிமீட்டரும் வண்டியை உருட்டிகொண்டே தான் வந்தார்.

பொது பாதையில் இடப்புறம் திரும்பியதுமே கிடைத்த காட்சி.

ரு வேறு திசைகளில் பிரிந்து, பாதை அறிந்து அடிவாரம் அடைந்தோம்.
வழி கேட்க ஆள் இல்லாததால் முழித்து கொண்டிருந்த இடம்.
  கற்பாறைகளினால் ஆன மலை தான் சமணர்களின் குகை இருக்குமிடம்
 மேக கூட்டங்கள் மிக அருமையாக இருந்தன,
மலையின் அடிவாரத்தில் இருந்து சில கிளிக்ஸ்




மூதாதயரைத் தேடி ஒரு பயணம் 6 : கீழக்குயில்குடி


இந்த முறை மதுரை செல்லும் போது கீழக்குயில்குடி, அழகர்கோவில், கிடாரிபட்டி, அரிட்டாபட்டி போகலாம் என முடிவு செய்து வைத்திருந்தேன், இதை பற்றி நண்பர் பாலாஜி அவர்களிடம் சொன்ன போது கீழக்குயில்குடி வருவதாக சொன்னார், சொன்னது போல் அடுத்த நாள் காலை 6 மணிக்கு எங்களது வீட்டிற்க்கு வந்து அழைத்து சென்றார்.

சமணர்களின் வரலாற்றை தாங்கி நிற்கும் கீழக்குயில்குடி சமண மலை,  பழைய பெயர் உயிர்க்குடி, மதுரையிலிருந்து நாகமலை புதுக்கோட்டை செல்லும் வழியில் நான்கு வழிச்சாலையை தாண்டியதும்  பிரம்மாண்ட தோற்றத்துடன் வெளிப்பட்டு என்னை ஆர்வமூட்டுயது. மெயின் ரோட்டிலிருந்து இடப்புறம் திரும்பினால் இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் சமண மலை அடிவாரத்திற்க்கே கொண்டுவிட்டது அந்த சாலை. மலையில் அடிவாரத்தில் பெரிய தாமரை குளம், அதை சுற்றி பெரிய பெரிய ஆலமரங்கள், அய்யனார் கோயில். வண்டியை குளத்தை சுற்றி வந்து கோவில் அருகே நிறுத்தினோம்.

----

அய்யனாரை வெளியே இருந்தே வணங்கி விட்டு மலையேறினோம். கோவிலின் இடப்புறம் மலைஏறுவதற்க்கான பாதை இருந்தது, மலையில் ஏறுவதற்க்கு வசதியாக படிகள் வெட்டி பாதுகாப்பிற்க்காக இரும்பினால் கைப்பிடி அமைத்துக் கொடுத்திருக்கிறது தொல்லியல் துறை. படிகளில் ஏறும் போது இனம் புரியாத பயம் கலந்த ஆவலுடன் மேலே ஏறினோம்.

மலையில் ஒவ்வொரு உயரத்திலும் ஒரு தளம் உள்ளது. கைப்பிடி முடியும் இடத்தில் பேச்சிபள்ளம் என்ற இடம் இருக்கிறது. இது முதல் தளம், கரும்பாறைகளாக குன்றாக தெரிந்த மலை, கீழ் இருந்து பார்ப்பவர்களுக்கு மலையின் உச்சி மட்டுமே தெரியும். பேச்சிபள்ளம் இடம் தெரியாது, ஆனால் இங்கிருந்து மதுரையையே பார்க்கலாம்.


பேச்சிப்பள்ளம்
இந்த இடம் சிறு மண்டபம் அளவிற்க்கு ஒரளவு சமதளமாக இருந்தது,  எட்டு சமணதீர்த்தங்கரர்களின் புடைப்பு சிற்பங்கள் உள்ளன. (பாகுபலி, பார்சுவநாதர், முக்குடைநாதர், தீர்த்தங்கரர் இவர்களின் புடைச்சு சிற்பமே) அவற்றின் கீழ் வட்டெழுத்து கல்வெட்டுக்கள் உள்ளன. அதற்கு கீழே நீர்ச்சுனை உள்ளது. இதையே பார்த்து படம் எடுத்து கொண்டிருந்த போது வந்த பாதையை திரும்பி பார்த்தால் மதுரை தெரிந்தது, இடப்புறம் நாகமலையின் ஆரம்பத்தில் இருந்து நேர் கிழக்கே மீனாட்சி அம்மன் கோவிலும், வலப்புறம் மாடக்குளம், திருப்பரங்குன்றம் வரை மதுரையே ரம்மியமாக காட்சி அளித்தது.

இங்கு ஆச்சர்யபட்ட விஷயம் என்ன வென்றால் மலை புவியியல் ரீதியாக தென்கிழக்கில் ஆரம்பித்து வட மேற்கே 135டிகிரி கோணத்திலும். மலையில் அமைந்துள்ள பேச்சிபள்ளம் கிழக்கு திசையை பார்த்தவாறும் அமைந்திருக்கிறது, காமிராவில் பெரிய லென்ஸ் உபயோகித்து பார்க்கும் போது நேர் எதிரே மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் கோபுரம் தெரிந்தது, மேலும் வடகிழக்கே காவலுக்கு யானை படுத்திருப்பது போல் யானைமலையும், இடப்புறம் நாகமலையும் அமைந்திருந்தது. பொம்மை விளையாட்டில் வேண்டிய இடங்களில் தூக்கிவைக்கும் பொம்மைகள் போல அனைத்தும் மதுரையை நோக்கியே இருந்தது. எப்படி இதை சரியாக கணித்து பேச்சிபள்ளத்தை அமைத்திருந்தனர் அல்லது இயற்கையாகவே இந்த பள்ளம் அமைந்திருந்ததா என தெரியவில்லை இதை பற்றி ஆராய்ந்துள்ளார்களா என பார்க்க வேண்டும்.

கீழே உள்ள மேப்பில் திசைகளும், கருப்பு கோடிட்ட இடத்தில் பேச்சிபள்ளம்.



அங்கேயே சிறிது நேரம் இருந்தோம் மிதமான காற்று, தொட்டுவிடும் தூரத்தில் மேகம், சூரிய உதயத்தின் கீழ் மீனாட்சி அம்மன் கோவில் கோபுரம், அதிகாலையில் மலையை பார்க்கும் போது மிக அழகாகவும், அமைதியாகவும் இருந்தது.

மலையில் இரண்டாம் தளத்திற்க்கு செல்ல பேச்சிப்பள்ளத்திற்கு இடப்பக்கம் சென்று மலையேறினோம், மேலே ஒரு இடத்தில் கட்டிடத்தின் வெறும் தளம் மட்டும் இருந்தது. அங்கு முன்பு ஏதேனும் கற்கோவில் இருந்திருக்கலாம். தளத்தில் சுவர்களில் கல்வெட்டுகள், 8 - 9ம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டுகளாக இருக்கலாம். சில எழுத்துக்களை என்னால் படிக்க முடியவில்லை, அறிஞர்கள் இந்த இடம் பாண்டிய மன்னன் ஒருவர், அவர் மனைவி பெயரில் சமணபள்ளியாக இயங்கியது என கூறுகின்றார்.

கோவிலின் தல விருட்சம் போல் அருகிலேயே ஒரு மரம், மரம் பெயர் தெரியவில்லை, அருகில் எந்த மரமும் இல்லாமல் தனியாக அழகாக இருந்தது. மலையின் உச்சியில் இருக்கும் தளத்திற்க்கான தொடர்ச்சி  இங்கிருந்தே ஆரம்பிக்கிறது, கொஞ்சம் அருகிலேயே பேச்சிபள்ளத்தின் நேர் மேலே இருந்த வட்டவடிவத்தில் இருந்த சிறு பள்ளம் எண்ணெய் கொப்பரை போல் இருந்ததால் (Dia : 3.5 அடி இருக்கலாம்) தீபம் ஏற்றவதற்க்காக இருக்காலம் என நினைக்கிறேன்.

இரண்டாம் தளம்தான் பிரதானமாக இருந்தது, நெடுக நீண்டிருந்த மலை இரு புறம் மலையின் உச்சி இருக்க இந்த தளம் நடுவே ஒரளவு சமதளமாக தொட்டில் போன்ற அமைப்பில் இருந்தது, அந்த வழியே சென்று பயணத்தை தொடங்கினோம், போக போக கொஞ்சம் உயரம் ஆனது அருமையான சூழல், யாருமற்ற தீவு ஒன்றில் தனியாக சுற்றி கொண்டிருப்பது போன்ற இருந்தது, மழை நீர் ஒடை போல் சென்ற பாதை வழியாக பயணத்தை தொடர்ந்தோம், சில இடங்களில் பாறைகளில் ஏற வேண்டிய இடங்களில் ஏறி திரும்ப இறங்க முடியாமல் தவித்தோம், ஒரு இடத்தில் பெரிய அகலமான பாறை அதன் கீழ் தண்ணீர் தேங்கி இருந்தது, பாறையில் பாசி படிந்திருந்தது மேலிருந்து மழைநீர் அல்லது ஊற்று மேலிருந்து அருவியாக விழுந்திருக்கலாம்.

மலையின் இரண்டாம் தளத்தின் கடைசி இடத்தில் பாறைகளால் சூழ்ந்த அடிபகுதி அகலமாகவும் உச்சி சிறுத்தும் கூம்பு வடிவில் இருந்தது, அருவி பாறையில் இருந்து பார்த்த போது அவ்விடம் பனிமலை லிங்க வடிவில் தெரிந்தது, அருகே சென்று பார்த்தோம் மக்கள் புழங்கிய மாதிரி இல்லை, மைல்கற்களையே சாமியாக்கும் நம் மக்கள் இவ்விடத்தை விட்டு வைத்திருப்பது ஆச்சர்யமாக இருந்தது ஒருவேளை எனக்கு மட்டும் தெரிந்த மாய பிம்பமா (Illusion).


மலையின் முடிவில் மேலிருந்து கொட்டியது போன்று சிதறி கிடந்தது பாறைகள்,  அருகே நாளை மாற போகும் விளைநிலங்கள், தூரத்தில் இன்றே மாறி நிற்க்கும் வில்லாக்கள், எங்கோ சத்தமிடும் வண்டியின் ஒலிப்பான், பலவிதமான ஆக்கிரமிப்பு முனைப்புகள் நிகழ்கின்ற போதிலும் இன்றும் ஒரு வசீகரமான தன் இயற்கை வனப்பை எவ்விதத்திலும் இழக்காமல் இருக்கிறது இந்த சமணமலை.

வந்த பாதையிலேயே திரும்பி கொண்டிருந்த போது தல விருட்சம் போல் இருந்த மரத்தின் பக்கம் மூன்றாம் தளம் இருந்த மலைக்கு சென்றோம், அங்கு ஓர் தூண் உள்ளது. அங்கு கன்னடத்தில் ஐந்து பெயர்கள் செதுக்கப்பட்ட கல்வெட்டுக்கள் உள்ளன . அங்கிருந்து காணும் போது மதுரை மிக அற்புதமாக தெரிந்தது.

மலையின் அடிவாரம் வந்த பின் அங்கிருந்த அய்யனார் கோயிலுக்கு சென்றோம். பூதங்கள் நம்மை வரவேற்க, குதிரைகளில் கருப்புச்சாமி கம்பீரமாக வந்து கொண்டிருக்கிறார். உள்ளே அமைதியாய் அய்யனார் அமர்ந்திருக்கிறார். அவருக்கு முன்னால் யானை உள்ளது. பந்தல் இட்டு வாழைமரம் கட்டி இருந்தனர், முதல் நாள் கல்யாணம் நடந்திருக்கும் போலும், கோவிலின் வெளியே பட்டவன் சுவாமி என்ற கோவில் இருந்தது அதில் இருந்த கல்வெட்டு
கீழ்க்குயில்குடி மூன்று தேவர் வகையறாவை சேர்ந்த சின்னப்புலி தேவர் வகையறா வீரத்தேவர் (எ) பட்டவன் சுவாமி நினைவு ஆலயம்
குறிப்பு: அங்கிலேயர்கள் ஆட்சி முன்பு (முஸ்லாம்) மாலிக்கபுர் படையெடுப்பு காலங்களில் ஊர்க்காக உயிர் தியாகம் செய்தவர். என்று குறிப்பிட்டுருந்தனர்

குளக்கரையில் அமர்ந்து மீன்கள் விளையாடுவதை பார்த்து கொண்டிருந்தோம், மலையின் பின்னால் சுரங்கம் இருப்பதாக சொன்னர் அங்கிருந்த பெரியவர் ஆர்வத்துடன் அங்கு சென்றோம். அந்த இடத்தை செட்டிப்புடவு என அழைக்கின்றனர்.


செட்டிப்புடவு
மலையில் இயற்கையாக அமைந்த குகைதளம் இருக்கிறது. குகையில் சமணர்களின் புடைப்பு சிற்பம் உள்ளது, குகைக்கு வெளியே சமணத்தீர்த்தங்கரரின் பெரிய சிற்பம் உள்ளது, அந்த சிற்பம் காது பெரிதாக செட்டியார் போல் இருப்பதாக மக்கள் கருதியதால் இந்த  இடத்தை செட்டிப்புடவு என்று அழைக்கிறார்கள். புடவு என்றால் குகை என அர்த்தம்.

மலையை ஒட்டி செல்லும் பாதையில், வலப்புறம் மலையை ஒட்டியவாறு படிக்கட்டுகள் தெரிந்தன, மரங்கள் சூழ்ந்த இந்த பாதையில் மேலே சென்றோம்,  மலையில் இயற்கையாக அமைந்த குகைதளம் இருந்தது. குகைக்கு மேலே சமணத்தீர்த்தங்கரரின் பெரிய சிற்பம் இருந்தது, ஏறத்தாழ ஆறடி உயரம் இருக்கும்,  தந்தட்டி போட்டு தொங்கியது போல் நீண்டு வளர்ந்த காதுகள், ஒளிவட்டம், இருபுறமும் சாமரம் விசுபவர்கள், அசோக மரத்தின் கீழ் அமர்ந்த கோலம். தீர்த்தங்கரர்களின் சிற்பங்களிலேயே இதுதான் மிகவும் அழகானது என ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.  இந்த சிற்பங்களை பார்க்க குகைக்கு நேர் எதிரே பால்கனி போன்று தளம் அமைத்து இருக்கிறார்கள் ASI.

குகை ஒரு சிறிய மண்டபம் போன்று இருந்தது, நிறைய கற்கள் கொட்டிவைத்து மூடி வைத்தது போல் அமைந்திருந்தது. இவையே சுரங்கம் என் அழைக்கின்றனர், பொதுமான வெளிச்சத்துடன், குளிர்ச்சியாகவும் அமைந்திருந்தது. கடும் கோடையிலும் கூட அவ்விடம் குளிர்ச்சியுடன் இருக்கும் போல தோன்றியது, மூலையில் சுனை நீர் கசிந்து வந்தது, தீர்த்தங்கரர்கள் சுனை நீர் மட்டுமே அருந்துவார்களாம்.

குகையின் வலதுபுறம் மேல் தெரியும் உள்வாங்கிய டூம் போன்ற அமைப்பில் 5 சிற்பங்கள் இருக்கின்றன, சில சிற்பங்கள் சமண வேதங்களின் நிகழ்ச்சிகளைக் குறிக்கும் வகையில் புடைப்புச் சிற்பங்களாக உள்ளது. சிற்பங்களுள் ஒன்றில் சிங்கம் மேல் அமர்ந்திருக்கும் பெண் தெய்வம் யானை மேல் இருக்கும் ஆணுடன் போர் புரிவது போன்ற சிற்பமும், மூன்று தீர்த்தங்கரர்கள், பத்மாவதி இவர்களின் புடைப்பு சிற்பங்கள் உள்ளது. யானை சிற்பங்கள் அதிகமாக தென்படுகிறது. கல்வெட்டுகள்  வட்டெழுத்துகளில் உள்ளது.

இவ்விடம் சமண துறவிகளின் இருப்பிடமாகவும், சமணர்களின் வழிபாட்டுத் தலமாகவும், சமண பள்ளியாகவும், மருத்துவமனையாகவும் 13 ம்  நூற்றாண்டு வரை இயங்கி வந்துள்ளது.  அரசரின் செல்வாக்கும் மக்களின் ஆதரவும் இழந்ததால் படிப்படியாக தன் செல்வாக்கை இழந்து வீழ்ச்சியுற்று இருக்கிறது. இங்கே சில புனித மரங்கள் இருந்து வெட்டபட்டதாக கூறுகின்றனர். ஒரு சில மரங்கள் மட்டுமே இருக்கின்றன, சில மூலிகை செடிகளும் இருக்கின்றன, காற்றில் நறுமணம் விசுகிறது.

ஒவ்வொரு சிற்பங்களுக்குள்ளும் ஒரு கதை இருக்கிறது, ஏதோ நம்மிடம் பேச எத்தனிக்கிறது, பத்து நிமிட அமைதி கால இயந்திரம் இல்லாமலேயே எங்கோ என்னை கூட்டி செல்கிறது. விடை பெற மனம் இல்லை, மிண்டும் மீண்டு வருவேன் என்று எண்ணி கொண்டு கிளம்பினோம்.

------
தொன்மங்களை பற்றிய அறிவும், நம் வரலாற்றை பற்றிய பெருமித உணர்வும் மக்களுக்கு குறைந்து வருகிறது. வரலாற்றை வெறும் மனனம் செய்யும் பாடமாக்கி, தொன்மை என்றால் என்னவென்று தெரியாமல் வளர்ந்ததால் பல்லாயிரம் காலத்துப் பழமையின் மேல் தன்னுடைய பெயரைக் கிறுக்கும் காலித்தனம் வராது, வரும் வழி எங்கும் காலி மதுகோப்பைகள், தீன்பண்டங்களின் எச்சம், அதை சுற்றிய பேப்பர், தண்ணீர் பாட்டில்கள் அங்கங்கே இறைந்து கிடந்தன, சமூக அக்கறையையும் சுற்றுபுற தூய்மையையும் அறியாத மக்கள் மாக்களே.

வரலாறு விலை மதிப்பு அற்றவை, பாரம்பரிய மிக்க இந்த சிற்பங்கள் தான் நமது கலாச்சாரத்தின் தொன்மையை உலகுக்கு எடுத்துச் சொல்பவை. அவற்றை நாம் பார்ப்பதும் கிடையாது. பாதுகாப்பதும் கிடையாது. நமது பாரம்பரியத்தைப் பற்றி நாம் தெரிந்து கொள்வோம், பிறருக்கும் சொல்வோம். அந்த இடங்களை நேரில் பார்த்து வரும் தலைமுறைக்காவது வழி காமிப்போம்.


மூதாதயரைத் தேடி ஒரு பயணம் 5 : கீழக்குயில்குடி


இது வரை மலையை சுற்றி பார்த்தோம், இப்போது மலையின் அடிவார்த்தில் இருந்த குகை பகுதிக்கு செல்வோம்.
மலையை ஒட்டி ஒரு பாதை உள்ளது. அங்கு இயற்கையாக அமைந்த குகைத்தளம் உள்ளது அதற்க்கு செல்லும் பாதை. இந்த குகை தளத்தை செட்டிப்புடவு என அழைக்கின்றனர்.

செட்டிப்புடவு போகும் பாதை
 குகைக்கு வெளியே ஏறத்தாழ ஆறடி உயரமுள்ள சமணத்தீர்த்தங்கரரின் பெரிய புடைப்புச்சிற்பம் உள்ளது.
மகாவீரர்
செட்டிப்புடவு என்னும் குகைதளம்
குகையின் வலதுபுறம் மேல் தெரியும் டூம் போன்ற அமைப்பில் 5 சிற்பங்கள் இருந்தன.
அந்த குகை சிற்பங்கள்
செட்டிப்புடவு

செட்டிப்புடவு

செட்டிப்புடவு

செட்டிப்புடவு

செட்டிப்புடவு

செட்டிப்புடவு

மூதாதயரைத் தேடி ஒரு பயணம் 4 : கீழக்குயில்குடி


கீழே இருந்து பார்க்கும் போது வெறும் பாறைகளாக தெரிந்த மலை, உச்சியில் நீண்ட தொட்டில் போல் இருந்தது.

 நாகமலை மலை ஆரம்பம் (இடப்புறம்)
 இந்த மலையில் ஆச்சர்யபட்ட இன்னொரு விஷயம் இங்கிருந்த ஒரு பாறைகளில் இருந்த லிங்க வடிவம்.
 அருகே இருந்து பார்த்த போது லிங்க வடிவில் அமைந்திருந்த குன்று.
 மலையின் பின் பகுதி

மூதாதயரைத் தேடி ஒரு பயணம் 3 : கீழக்குயில்குடி


படி ஏறி வந்ததும் நேர் எதிரே தீர்த்தங்கரர்கள் சிற்பம் முதல் மடலில் பார்த்தோம்,
அப்படியே திரும்பி வந்த பாதையை பார்த்தால் இடப்புறம் யானை மலை, படத்தில் நடுவில் தெரியும் சூரிய வெளிச்சத்தின் கீழ் மீனாட்சிஅம்மன் கோவில் கோபுரம்.

மலை வட- மேற்க்கு திசையில் இருந்தாலும் புடைப்பு சிற்பங்கள் இருந்த இடம் மேற்க்கில் இருந்து கிழக்கே பார்த்த மாதிரி இருந்தது.
Madurai East

மீனாட்சி அம்மன் கோவில் கோபுரம். 
மீனாட்சி அம்மன் கோவில் கோபுரம்.

தீர்த்தங்கரர்களின் சிலைக்கு மேலே இருந்த வட்டவடிவத்தில் இருந்த சிறு பள்ளம். (Dia : 3.5 அடி இருக்கலாம்)
தீபம் ஏற்றவதற்க்காக இருக்கும் என்று நினைக்கிறேன்,

இன்னும் கொஞ்சம் மேலே இருந்து

மலையின் மேல் இருந்த மரம், 
 மாடக்குளம் அருகே உள்ள மலை
எதிரில் தெரியும் மலை, அழகர்கோவில், பெருமாள் மலை