Friday, July 3, 2015

மூதாதயரைத் தேடிப் பயணம் இனி!!!


நான் எந்த வேலையை ஆரம்பிக்கும் போது எது என் இலக்கு, பிரதிபலன் என்ன என்று யோசித்ததே இல்லை, என் மனதிற்க்கு பட்டதை செய்யனும் அவ்வளவே முழுக்க முழுக்க என் சுயநலத்துனுடேயே அந்த வேலையில் இறங்கி செய்து இருக்கேன்.

புதிதாக ஏதேனும் முயற்சிக்கலாம் என எடுத்த கோலங்களில் ஆரம்பித்து, 3டி மாடலிங், கோவில், மலை, குகை, எழுத்து, தொழில், பொழுதுபோக்கு என எதிலும் என்கைக்கு எந்த துறை ஒத்துவருதோ அதில் என் கையால் என் அறிவில் அதிகபட்சம் என்ன செய்ய முடியுமோ அதை என் அளவில் சிறப்பாக செய்து வந்து இருக்கிறேன். இது தான் வெற்றி என்று அதை நோக்கிய பயணித்ததில்லை.

பாதை எது என்றே தெரியாமல் பயணித்தவைகள் செய்து வந்த வேலைகள், என் ”மூதாதயரைத் தேடி” என நான் பயணித்ததையே எனக்கான பாதையாக உருவாக்கி வருகிறேன். ஏற்கனவே ஆரபித்து நடத்தி வந்தவை தான் கோலம் மட்டும் இருந்த என் இணையத்தில் தற்பொழுது புதிதாக நான் எடுத்த படங்களும் இடம் பெற இருக்கின்றன.

கோலம், சிற்பங்கள், கோவில், மலைகள், கல்வெட்டுகள் தான் இருக்க போகிறது, கொஞ்சம் புதிதாக தேடுவதற்க்கு வசதியாக, தெரிந்தவைகளுக்கு விளக்கத்தோடு, பார்ப்பதற்க்கும் படிப்பதற்க்கு ஏதுவாக இருக்கலாம் அவ்வளவே. மற்ற இணையத்தை விட என்ன புதிதாக என்ன இருந்து விட போகிறது?

இடிந்து போன கோவில்கள், கோட்டைகள், அழிந்து போன எழுத்துக்கள், ஒவியங்கள், கடல்புறாவின் கப்பல் என எனக்கு என்ன விருப்பமே எது என்னால் முடியுமோ அதில் என் சிற்றறிவை கொண்டு வரையலாம் என்றிருக்கிறேன் (இதன் தொடர்புடைய ஆளுமைகள் உதவியுடன்) இணையம் ஒவியங்களாகவும், புகைப் படங்களாகவும், குறும்படங்களின் கூடமாக இருக்கும்.

சொன்னவைகள் யாவும் நாளையெ காட்சி பொருளாக இருக்க போவதில்லை, என் நேரம் காலத்தின் தேவையை பொருட்டும் அவைகள் காட்சிக்கு வரும்.

இணையத்தின் முகப்பு பக்கம் வடிவம் இணைத்துள்ளேன். இணையதளம் விரைவில் வர இருக்கிறது.

என் கற்பனைக்கு வடிவம் தந்து கொண்டிருக்கும் inoesis டீம்க்கு என் நன்றி
— with ஸ்ரீதேவி செல்வராஜன், Tamilselvan Lakshmanan, Rajkumar Kalimuthu and Muhilarasu Selvaraj.